இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.
அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.
சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும்.
தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான்.
சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேரிடையான விசராணை, உண்மையில் தேவைப்படுகிறதா என்பதையெல்லாம் அவர்கள் நேரிடையாக கள ஆய்வு செய்கிறார்கள். இதன் நோக்கம் கல்விப்பசி இருக்கும் நபர்களை இலகுவாய் தேடி கண்டடைகிறார்கள். அவர்களை நகர்த்துகிறார்கள்.
இங்கே பலருக்கும் கல்வி என்பது சம்பாதிக்க, வரதட்சணை வாங்க, சாதிப் பெருமைகளை பேச என்றே நினைத்துகொண்டிருக்கிறார்கள் .பல படித்த தற்குறிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் கல்வி ஒரு தலைமுறையை பிடிகளில் இருந்து விடுவிக்கும் ஒரு கருவி. குறைந்த பட்சம் நீர்த்துப்போகச் செய்யும்.
சூர்யா மீதான சங்கீகள் காழ்ப்புணர்ச்சி ஒரு வக்கிர மனநிலை. உலகம் முழுக்க அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அந்த சங்கீகள் கால் கழுவி தண்ணீர் குடிக்கும் சாதி வக்கிரங்கள் இன்னொரு பக்கம். இதனையெல்லாம் இடதுகையால் தள்ளிவிட்டே அவர் சமூகம் நோக்கி நகர்கிறார்.
சூர்யா - நல் மனிதராய் சமூகத்தில் எப்போதும் கொண்டாடப்படுவார். நினைவூட்டுப்படுவார்.
கருத்துகள்
கருத்துரையிடுக